தவாங் பகுதியில், சீனப் படைகள் அத்துமீறியதாக தகவல் வெளியாகி உள்ளது

 reports of Chinese forces

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில், சீனப் படைகள் அத்துமீறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருணாசல பிரதேசத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் தவாங் பகுதியில் கடந்த 9ஆம் தேதி சீன வீரர்கள் 300 பேர் தாக்கியதாகவும் இதற்கு இந்திய தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டுதாகவும் தெரியவந்துள்ளது.

reports of Chinese forces

இம்மோதலில் இந்திய தரப்பில் 6 வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன தரப்பில் இதை விட அதிகம் பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இம்மோதலுக்கு பின் இரு  படைகளும் நிகழ்விடத்திலிருந்து அகன்றுவிட்டதாகவும் இதனால் பதற்றம் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அரசிடம் கேள்விகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Post a Comment

Previous Post Next Post