மருத்துவக் கல்லூரி மாணவருக்கு திடீரென மாரடைப்பு எற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்

heart attack and died

திருச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு திடீரென மாரடைப்பு எற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் - ஜீவா தம்பதியர். இவர்களது மூத்த மகன் பிரேம்நாத், இவர், திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

medical college

இந்நிலையில், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் பிரேம்நாத் தனது சக நண்பர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக மருத்துவ மாணவர்கள் அவ்ரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாக கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரேம்நாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு கல்லூரி முதல்வர் நேரு மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

hospital

இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் நாளை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என கல்லூரி முதல்வர் நேரு தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post