சிறுவன் ஒருவன் குச்சியால் அடித்ததால் கோபம் அடைந்த யானை. பகிரப்பட்டுள்ள வீடியோ?

 An elephant got angry


உலகில் மக்கள்தொகை பெருக பெருக, விலங்குகளுக்கான வாழ்விடங்கள் குறைந்துக்கொண்டே வருவது விலங்குகள் - மனித மோதல்கள் அதிகரிப்பதை வைத்தே அறிந்துகொள்ளமுடியும். குறிப்பாக வன விலங்குகள் நடமாடக் கூடிய இடங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றியதால் இந்த மோதல் சமீப காலமாக பெருகியே இருக்கிறது.

அதன்படி சாவகாசமாக உலாவரும் வன விலங்குகளை மனிதர்கள் விரட்டுவதும், அதனால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோ பலரையும் கோபப்படுத்தியிருக்கிறது.

அந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகரிகாரி சுரேந்தர் மெஹ்ராதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில், “பைத்தியக்காரத்தனம்” எனக் கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில், படையாக இருக்கும் யானைகளை சிறுவன் ஒருவன் குச்சியால் அடித்து அதனை வம்புக்கு இழுக்கிறார். இதனால் கோபமடைந்த ஒரு யானை சிறுவனை தாக்காமல் துரத்தவே செய்கிறது. பதறிப்போன சிறுவனும் அவனது நண்பனும் அவ்விடத்தை விட்டு ஓட்டம்பிடிக்கிறார்கள்.

வெறும் நான்கே நொடிகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் சிறுவர்களின் இந்த அட்டூழியத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், “வன விலங்குகளின் இடத்தை ஆக்கிரமித்தோம். தற்போது அதனை விரட்டவும் செய்கிறோம்.” என்றும், “இந்த பூமி நம்மைப் போன்ற மனிதர்களுக்கானது அல்ல” கமென்ட் செய்திருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post