புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் மோசடி முயற்சி

minister Chandrapriyanka

ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் பெயரில் புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் மோசடி செய்ய முயன்றது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலாளர் ஜவகர் ஆகியோருக்கு வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல்கள் அனுப்பி மோசடி முயற்சிகள் நடந்தன. இந்தநிலையில் புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சரான சந்திர பிரியங்காவிற்கும் வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கான டிபி-யில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் படம் வைக்கப்பட்டிருந்தது.

Governor Tamilisai

இதனால் சந்தேகமடைந்த அமைச்சர் சந்திரபிரியங்கா இதுகுறித்து ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தார். அப்போது தான் அது போலியானது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் மனோஜ் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டவர் யார் என்று விசாரித்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post