மாமல்லபுரம் புராதன சின்னங்களைக் கண்டு ரசித்த மொரிஷியஸ் அதிபர்


மொரிஷியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங் ரூபன் இன்று தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் மொரிஷியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங் ரூபன் கலந்துகொண்டார். இதையடுத்து இன்று மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய புராதன சின்னங்களை தனது குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அதோடு புராதன சின்னங்களின் வரலாற்றையும் பெருமைகளையும் கேட்டறிந்தார்,


அவருடன் மொரிஷியஸ் நாட்டு அரசு அதிகாரிகள் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். இவரின் பாதுகாப்பிற்காக மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post