இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது ஃபாலோயர்ஸ்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாகவும், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவோரை பாராட்டவோ, அவர்களை அங்கீகரிக்கவோ எப்போதும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் பதிவுகள் தவறாது.
அந்த வகையில் நார்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்னின் ட்விட்டர் பதிவை ஆனந்த் மஹிந்திரா ரீட்வீட் செய்திருப்பது தற்போது வைரலாகியிருக்கிறது. அதன்படி, எரிக்கின் ட்வீட்டில் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை என கேப்ஷன் இடப்பட்டு அதில் மருத்துவரின் மருந்துச் சீட்டை இணைத்திருக்கிறார்.
Looks like you were tweeting this to me, @ErikSolheim ??
— anand mahindra (@anandmahindra) November 15, 2022
By the way, my wife prescribed this for me aeons ago. And she doesn’t even possess a medical degree… https://t.co/UOu5lp54sE
அதில், தூக்கமின்மைக்கான சிகிச்சைக்கு வந்த ஆனந்த் என்ற நோயாளிக்கு “கம்ப்யூட்டரையும், செல்ஃபோனையும் தூக்கி எறிய வேண்டும்” என சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதனை ரீட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா, “எரிக், இது எனக்காக பதிவிடப்பட்ட ட்வீட் போன்று இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே என்னுடைய மனைவி இதைத்தான் எனக்கு பரிந்துரைத்தார். ஆனால் என்ன அவர் மருத்துவம் படிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட் ஆயிரக்கணக்கானோரை சென்றடைந்திருக்கிறது. மேலும், “என்னுடைய மனைவி தினமும் இதே சிகிச்சையைதான் கூறுவார்” , “இந்த பரிந்துரையைதான் நாங்கள் குடும்பமாக கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறோம்” என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்திருக்கிறார்கள்.