சென்னையில் ஆட்டோவில் குழந்தையை கடத்தியவரின் பகீர் வாக்குமூலம்

சென்னை சிட்லபாக்கம் அடுத்த செம்பாக்கம், திருமலை நகர், முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வினோத் இவரது நான்கரை வயது குழந்தை வர்ஷாவை, சம்சுதீன் என்பவர் இன்று மாலை ஆட்டோவில் கடத்தி சென்றார்.

image

இதையடுத்து வாகன சோதனையில் குரோம்பேட்டை எம்.ஐ.டி.மேம்பாலம் அருகே போக்குவரத்து போலீசார் சிறுமியை மீட்டு, ஆட்டோவை பறிமுதல் செய்து சம்சுதீனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

image

விசாரணையில், சம்சுதீனுக்கு திருமணமாகி இரு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடு தன்னை பிரிந்து சென்ற மனைவி, குழந்தைகளையும் அழைத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர்கள் மூவரும் தூத்துக்குடி காயல்பட்டினத்தில் வசித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

தனது குழந்தைகளை வளர்க்கமுடியாத ஏக்கத்திலும், குடிபோதையிலும் ஆட்டோவில் இருந்த 2 சிறுவர்களை இறக்கிவிட்டு வளர்ப்பதற்காக பெண் குழந்தையை மட்டும் கடத்தியதாக வாக்குமூலம் அளித்ததாக சிட்லபாக்கம் போலீசார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post