நூற்றாண்டு விழா-கலை நயத்துடன் காட்சியளிக்கும் செட்டிநாடு இல்லம்

வள்ளியப்பா குடும்பத்தினருக்கு சிங்கம்புணரி அருகே அழகிய கலை நயத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் செட்டிநாடு இல்லத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.






பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் தமிழர்களின் பாரம்பரிய கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் செட்டிநாடு இல்லத்தின் நூற்றாண்டு விழா நேற்று சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் நடைபெற்றது.

image

அரண்மனை போன்ற தோற்றம் கொண்ட இந்த பங்களா பல திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளதோடு சுற்றுலா ஆர்வலர்கள் கண்டு மகிழும் இடமாகவும் இருந்து வருகிறது.




இதன் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மற்றும் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

image

அப்போது தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான பல்லாங்குழி விளையாட்டை அமைச்சர் மனோ தங்கராஜும், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியும் அமர்ந்து விளையாடி மகிழ்ந்தனர்.

Post a Comment

Previous Post Next Post