அரசு கலைக் கல்லூரி மாணவர்களை தாக்கிய இளைஞர்கள்


தென்காசி அருகே அரசு கலைக் கல்லூரி மாணவர்களுடன் மற்றொரு தரப்பினர் மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி அடுத்த சுரண்டை பேருந்து நிலையத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அரசு கலைக்கல்லூரி மாணவர்களுடன் மற்றொரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.


இந்நிலையில், மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது இடத்தில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறி உள்ளதை அடுத்து பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதையடுத்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், கல்லூரி மாணவியிடம் ஊர் இளைஞர்கள் பேசியதால் ஏற்பட்ட பிரச்னையில் ஊர் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே கைகலப்பு அடிதடி ஏற்பட்டதாக தெரியவருகிறது.

Post a Comment

Previous Post Next Post