உலகின் மிக உயரமான முருகன் கோயிலில் யோகிபாபு தரிசனம்



உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை புத்திர கவுண்டன் பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் உலகத்திலேயே மிக உயரமான முருகன் சிலை (146 அடி) உள்ளது. இக்கோவிலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து வருவர்.



இந்நிலையில் திரைப்பட நடிகர் யோகிபாபு தரிசனம் செய்வதற்காக முத்துமாலை முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். சஷ்டி நாளில் வருகை தந்த யோகிபாபுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் கோயில் வளாகத்தை சுற்றிவந்த யோகிபாபு, முத்துமலை முருகனை தரிசனம் செய்தார்.


அவருடன் காமெடி நடிகர் கணேஷ் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post