சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்- When is Simbu's 'Vendhu Tananthu Kadu' OTT Release?

 சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

Simbu-s-Vendhu-Thanindhathu-Kaadu-gets-an-OTT-release-date

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் 3-வது முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கிய திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தில், சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்திருந்தார். மேலும் ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 15-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

image

மேலும் இந்தப் படத்தில் தாமரை எழுதிய பாடல் வரிகளில், மதுஸ்ரீ குரலில் வெளியான ‘மல்லிப்பூ’ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்தப் பாடலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருவதுடன், ரீல்ஸ் செய்தும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி வரும் 15-ம் தேதியுடன் ஒருமாதம் நிறைவடைவதை முன்னிட்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thanks :

puthiyathalaimurai

Post a Comment

Previous Post Next Post