India won the match-Centurion Shreyas Iyer

 சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர்! மாஸ் காட்டிய இஷான் கிஷன்!- இந்தியா அசத்தல் வெற்றி

Shreyas-Iyer-scored-a-century--Ishan-Kishan-who-showed-mass----India-amazing-win

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயரின் சதத்தால், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த போட்டியை வென்று தொடரை காப்பாற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது.

image

இந்நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து, இந்திய அணியை பந்துவீசுமாறு அழைத்தது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் சீரான விகிதத்தில் விக்கெட்டை இழந்தாலும் 3ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஹென்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் கூட்டணி அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்க அணிக்கு 278 என்ற நல்ல ஸ்கோரை அமைத்துக் கொடுத்தனர். அபாரமாக விளையாடிய ஹென்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

image

பின்னர் 279 என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் சீரான தொடக்கத்தை கொடுத்தாலும், ஷிகர் தவானை போல்ட் எடுத்து பெவிலியன் அனுப்பினார் பர்னல். அடுத்து சுப்மன் கில்லும் நிலைத்து நின்று ஆடாமல் ரபாடா வீசிய பந்தில் அவரது கையிலேயே கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

image

3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு தண்ணி காட்டிய இஷான் கிஷன் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி 93 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை அடித்து அசத்தினார். இறுதிவரை நிலைத்து விளாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 4.1 ஓவர் மீதம் இருக்கும் நிலையில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 15 பவுண்டரிகள் அடித்து 113* ரன்களுடன் களத்தில் இருந்தார்.

image

இரண்டாவது போட்டியை வென்ற நிலையில் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது இந்திய அணி. தொடரின் முடிவை உறுதி செய்யும் மூன்றாவது மற்றும் கடைசிபோட்டி அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

Thanks:

puthiyathalaimurai.

Post a Comment

Previous Post Next Post