யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன் - லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நிகழ்ந்த மோதல்-Clashes in League of Legends Cricket

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் யூசுப் பதான் மற்றும் மிட்சல் ஜான்சன் இடையே சண்டை ஏற்பட்டது.



லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதுஇந்தத் தொடரில் ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் 4 அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்இந்நிலையில்நேற்று இந்தியன் கேபிடல்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ப்ளே ஆஃப் சுற்று போட்டி நடைபெற்றது.


இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பில்வாரா கிங்ஸ் அணியில் யூசுப் பதான் அதிரடியாக விளையாடி வந்தார்அப்போது இவருக்கும் இந்தியன் கேபிடல்ஸ் அணியின் வீரர் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுஅந்தச் சமயத்தில் யூசுப் பதானை ஒரு கட்டத்தில் மிட்சல் ஜான்சன் தள்ளி விட்டுள்ளார்.

 இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறதுஇந்தச் சம்பவம் தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்இந்தப் போட்டியில்  யூசுப் பதான் 48 (24) ரன்கள் எடுத்தார்.

Thanks:

puthiyathalaimurai.

Post a Comment

Previous Post Next Post