நூலிழையில் உயிர்தப்பிய வருவாய் ஆய்வாளர்!

மதுரை வாடிப்பட்டியில் கனமழை காரணமாக அரசாங்க அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததில் நூலிழையில் வருவாய் ஆய்வாளர் உயிர் தப்பினார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது மேட்டுநீரோத்தான் கிராம வருவாய் ஆய்வாளர் அலுவலகம். இங்கு வருவாய் ஆய்வாளராக அசோக் குமார் பணியாற்றி வருகின்ற நிலையில், திடீரென நேற்று அலுவல கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து அசோக் குமார் பக்கவாட்டில் விழுந்தது. அதிர்ச்சியடைந்த வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

image

வாடிப்பட்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் மழையாலும், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் என்பதாலும் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

image

மேலும் சேதமடைந்த கட்டிடத்தை புதியதாக கட்டித்தர அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post