கடிதம் எழுதிவைத்துவிட்டு மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

பொன்னமராவதி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு எட்டு வயது மகனுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னமராவதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்கள் வீரானந்தம் - ஜெயபாரதி தம்பதியர். இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீரானந்தம் பக்ரைன் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும் மகனின் குடும்பச் செலவிற்கு பணம் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெயபாரதி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவரது மகன் ஸ்ரீ ஹரியுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

image

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொன்னமராவதி போலீசார், தற்கொலை செய்து கொண்ட தாய், மகன் ஆகிய இருவரின் உடலையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெயபாரதி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஜெயபாரதி எழுதியுள்ள கடிதத்தில், ”தனது இந்த முடிவிற்கு யாரும் காரணம் இல்லை. என் குடும்ப சூழ்நிலை எனது உடல்நிலை, எனது மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன், எனது உடலை எனது தந்தையிடமோ, கணவரிடமோ ஒப்படைக்க வேண்டாம். செத்தபிறகு கூட நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை.

image

கடந்த 8 வருடமாக எனது கணவர் எங்களுக்கு எதுவும் பண்ணவில்லை. கணவராகவோ அல்லது என் மகனுக்கு தந்தையாகவோ அவர் இருந்ததில்லை. என்னுடைய மகனிடம் நீ போய் உங்க அப்பாவிடம் இரு என சொன்னேன். ஆனால், அவன் கேட்காமல் என்கூடவே விஷமருந்தி விட்டான். இந்த வீட்டில் இருந்து ஒரு குண்டூசி கூட எனது கணவருக்கோ, என் தந்தையின் வீட்டிற்கோ போகக்கூடாது” என எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post