இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள்-First ODI between India and South Africa

 இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்கான டாஸ் அரை மணி நேரம் தாமதமாக போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது


இதையடுத்து இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி களம் இறங்குகிறது.

இதனிடையே லக்னோவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறும்  முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று வானிலை நிலவரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. லக்னோவில் இன்று மழை பெய்ய 57 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அக்குவெதர் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படியே போட்டி நடக்கும் லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் மழைப் பொழிவு காணப்பட்டதால் போட்டிக்கான டாஸ் அரை மணி நேரம் தாமதமாக போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க இருந்த ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Thanks:

https://www.puthiyathalaimurai.com/

Post a Comment

Previous Post Next Post