சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து குழந்தை உட்பட 7 பேர் படுகாயம்

பொன்னம்மாபேட்டை அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருமாத குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணா நகர் பகுதியில் மாணிக்கம் என்பவர் குடும்பத்தோடு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரோடு இரண்டு மகள்கள் மற்றும் பேரன் பேத்திகளும் இருந்துள்ளனர்.

image

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் ராஜேஸ்வரி அடுப்பு பற்ற வைத்ததாக தெரிகிறது அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் இந்த விபத்தில் வீட்டிலிருந்த ஒருமாத குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.

image

இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் உடனடியாக அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post