தனுஷ்கோடி: இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து அகதிகளாக மேலும் ஆறு பேர் தனுஷ்கோடி அடுத்த மணல் தீடையில் தஞ்சமடைந்தனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்த வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இலங்கையில் இருந்து வாழ 176 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்த நிலையில், அவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

image

இதையடுத்து இன்று மேலும் 6 பேர் தனுஷ்கோடி அடுத்த 1 ஆம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களை கடலோர காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.




from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post