66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்பான இருமல் சிரப், இந்தியாவிலும் விற்பனையா? - அரசு விளக்கம்-Cough syrup linked to 66 infant deaths

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு காரணமாக கூறப்படும் இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால், அந்த மருத்துகள் இந்தியாவிலும் விற்பனையானதா? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டத்தை தொடர்ந்து மத்திய சுகாதாரக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

இந்தியாவிலிருந்து கள்ளச்சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட 4 இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை என்றும் இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெவித்துள்ளது.

ஹரியானாவின் சோனேபட் என்ற பகுதியில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்கள் குறித்து , உலக சுகாதார நிறுவனம், மருத்துவ தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கையை வெளியிட்டது, அவை காம்பியாவில் 66 குழந்தைகளுக்குக் கடுமையான சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணம் இருந்தது எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) உள்நாட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது. காம்பியாவுக்கு தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இருமல் மற்றும் சளி சிரப்கள் குறித்து விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

image

முன்னதாக உலக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மரணங்கள் டயதிலீன் கிளைகோல் அல்லது எத்திலீன் கிளைகோல் என்ற மூலப்பொருள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகமிருந்து வந்தால் , அந்த நான்கு சிரப்புகளின் மாதிரிகள் சி.டி.எஸ்.சி.ஓ மூலம் சண்டிகரில் உள்ள மருந்து சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தது அடுத்த நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஹரியானாவின் சுகாதார அமைச்சர் அனில் விஜ், "இந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனையில் இல்லை. அவை ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விரிவான விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டதாகவே இருந்தாலும் கூட ஏன் சரியாக நெறி முறைப்படுத்தவில்லை, கண்காணிக்கப்படவில்லை? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post