மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 6 நாட்களில் 320 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.-Mani Ratnam's 'Ponniyin Selvan' collects Rs 320 crore in 6 days

 மணிரத்னத்தின்பொன்னியின் செல்வன்திரைப்படம் 6 நாட்களில் 320 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.



அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதியபொன்னியின் செல்வன்நாவல் திரைப்படமாக்கப்பட்டு, கடந்த 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் 6 நாட்களில் 320 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏற்கனவே இந்தாண்டு வெளியானபீஸ்ட்’, ‘வலிமைஉள்ளிட்ட படங்களின் வசூலைபொன்னியின் செல்வன்முந்தியுள்ளது. மேலும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டஆர்.ஆர்.ஆர்.’, ‘கே.ஜி.எஃப்.2’ படங்களின் வசூலையும் இந்தப் படம் முறியடித்துள்ளது.


அத்துடன் கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவானவிக்ரம்படத்தின் வசூலை இன்னும் ஓரிரு நாட்களில் முறியடிக்கும் என கூறப்பட்டு வருகிறது. ‘விக்ரம்படம் மொத்தம் 440 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டிய நிலையில், 2000 திரையரங்குகளில் வெளியானபொன்னியின் செல்வன்திரைப்படம், இரண்டாவது வாரத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாலும், தீபாவளி வரை படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததாலும் கூடுதல் வசூல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thanks:

https://www.puthiyathalaimurai.com/

Post a Comment

Previous Post Next Post