தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டு வந்ததாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் முன்னாள் ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, தமிழக ஆளுநராக இருந்தபோது தமிழகத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அங்கு பல்கலைகழக துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

image

மேலும் தமிழகத்தில் 27 பல்கலைக்கழக துணை வேந்தர்களை சட்டப்படி நியமனம் செய்தேன். என்னிடம் பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு பஞ்சாபில் யார் தகுதியானவர்கள் என்றெல்லாம் தெரியாது. கல்வி தரம் உயர் வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம் என பேசினார்.

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி விற்கப்பட்டது என முன்னாள் ஆளுநர் இன்று குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்தபோது, மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட விவகாரம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. ஆளுநர் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என அப்போதைய எதிர்கட்சியாக இருந்த தி.மு.க. கருப்புக்கொடி காட்டியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post