77 பந்துகளில் 22 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 205 ரன்கள் குவித்திருக்கிறார் ரஹீம் கார்ன்வெல்.
அமெரிக்காவில் அட்லாண்டா ஓபன் என்கிற டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் அட்லாண்டா ஃபயர் அணிக்காக விளையாடும் 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரஹீம் கார்ன்வெல் இரட்டைச் சதமடித்து அசத்தினார். 77 பந்துகளில் 22 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 205 ரன்கள் குவித்திருக்கிறார் ரஹீம் கார்ன்வெல். 266.77 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதனால் அட்லாண்டா அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை துரத்திய ஸ்கொயர் டிரைவ் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகரிக்கப்படாத போட்டியில் கார்ன்வெல் இந்த ரன்களை எடுத்ததால் இது சாதனைப் பட்டியலில் இடம்பெறாது. இருப்பினும் கார்ன்வெலுக்கு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்ற அட்லாண்டா ஃபயர் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 61 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
Thanks:
puthiyathalaimurai.
Tags:
Sports-games

