டி20 உலகக் கோப்பையை இந்த அணிகள் வெல்லலாம் - ப்ரெட் லீ ஆரூடம்- These teams can win the T20 World Cup - Brett Lee Arudam

 டி20 உலகக் கோப்பையை இந்த அணிகள் வெல்லலாம் - ப்ரெட் லீ ஆரூடம்



இந்தியா டி20 உலககோப்பையை வெல்ல பும்ரா போன்ற ஒரு வீரர் தேவை என்றும், மற்ற வீரர்கள் அதற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பேட்டியளித்த அவர், ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வாய்ப்பு உள்ளதாக தான் கருதுவதாக தெரிவித்தார்.



உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் பும்ரா போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை. காயம் காரணமாக தற்போது அவர் விலகியுள்ள நிலையில் புவனேஸ்வர் குமார், ஆர்ஷ்தீப் சிங் போன்ற பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும், இருவரும் சிறப்பான பந்து வீச்சாளர்கள் தான் என தெரிவித்தார்.


மேலும் லெஜண்ட்ஸ் லீக்கில் விளையாடியது குறித்து பேசிய அவர், ஓய்வு பெற்ற பின் 65 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது என தெரிவித்தார்.

thanks :

puthiyathalaimurai

Post a Comment

Previous Post Next Post