"பொறுப்புக்கு வந்த நாள் முதல் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றித் தந்தோம். அப்போது மக்களாட்சி நடைபெற்றது தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் அவர்களின் மகள் சத்தியசீலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

image

அதனைத் தொடர்ந்து திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து திருமணவிழாவில் பேசிய அவர்....

நான் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் போராட்டம் தான். போராட்டம் போராட்டம் என்று தாண்டி வெற்றியை பெற்றுக் கொண்டு இருக்கிறேன். அதிமுக-வை பலபேர் விலக்க நினைக்கிறார்கள். அதுஒரு போதும் நடக்காது மக்கள் சக்தி உள்ள இயக்கம் அதிமுக.

image

அதிமுக ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றித் தந்தோம். அப்போது மக்களாட்சி நடைபெற்றது தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி போதைப் பொருள் விற்பனை நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. திறமையற்ற முதலமைச்சர் இன்று ஆண்டுகொண்டு இருக்கிறார். விரைவில் உங்கள் மூலமாக நல்ல பதில் வர வேண்டும் என பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post