ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் - ஹெச்.ராஜா காட்டம்

ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும், இல்லை என்றால் அவர் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தையை முதல்வர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு ஆதாரங்கள் இல்லை. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக கட்சி அல்லது பிரதமரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை விமர்சனம் செய்யுங்கள். அதற்காக தேசத்தை எதிர்ப்பேன் இந்து மதத்தை எதிர்ப்பேன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசி வரும் ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும்,

image

இல்லை என்றால் அவர் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தையை முதல்வர் ஏற்றுக்கொள்வதாகக் கூற வேண்டும். இந்து மத உணர்வுள்ள இந்துகள் அனைவரும் ராசாவிற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபுக்கு காது ஒலி மிஷினை கூரியர் மூலம் அனுப்பி வைக்க உள்ளேன். அதனை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆ.ராசா போன்றவர்கள் திமுகவை அழிப்பது என முடிவெடுத்து செயல்படுகின்றனர் என்றும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post