
திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல், பொதுக்குழு நடத்துவது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஆ. ராசா, ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். திருப்பூர், கோவை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் யாரை புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கலாம் என்பது குறித்து தற்போதைய மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அத்துடன் அடுத்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவி விலகிய நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி விலகியுள்ளதாக கட்சியின் அமைப்புச்செயலாளரும், எம்.பியுமான டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகிய நிலையில் துணை பொதுச்செயலாளராக அடுத்த யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க: "ஆ.ராசாவை குறிவைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால்.." - சீமான் கடும் எச்சரிக்கை
target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News