நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்குச் செல்வேன் - சசிகலா

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்குச் செல்வேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதல்ல என சசிகலா தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்றவரிடம்....

image

பன்னீர் செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் என்ற கேள்விக்கு ?நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என பதிலளித்த அவர் தொடர்ந்து, திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல.

image

எடப்பாடி பழனிசாமி, நான் பழைய பழனிசாமி இல்லை எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு... அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள் தான் கூற வேண்டும். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post