விருதுநகர்: பேருந்து - பைக் மோதிகொண்ட விபத்தில் தாய் மகன் உடல் நசுங்கி பலி.!

விருதுநகர் அருப்புகோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாய்மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விருதுநகரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை வழியாக சாயல்குடி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி-விருதுநகர் பிரதான சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

image

இந்த விபத்தில் வாகனங்கள் மோதிகொண்ட வேகத்தில் இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சென்று இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

image

பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர காவல் நிலைய போலீசார் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள மேல அழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி மற்றும் அவருடைய மகன் செல்வகுமார் என்பது தெரியவந்தது. மேலும் அருப்புக்கோட்டை வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

image

தாய் மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post