”உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

உச்ச நீதிமன்றத்தின் தென்னிந்திய கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்றும், தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் கட்டும் பணிக்கும் மற்றும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்களை பராமரிக்கவும், ரூ.315 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் பணிக்களுக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில் சாா்பு நீதிமன்றம் கட்டுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவதற்கான கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில், வரும் 30-ம் தேதி பணி ஓய்வு பெறும் ”சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மிகச்சிறப்பாக பணியாற்றி இருக்கிறார் “அவருக்கு என் வாழ்த்துகள்.

நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் நீதிபதிகளுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் பெருமையாகவும் உணர்கிறேன். இங்கு நிற்கும் போது கூட, மிகப்பெரிய கம்பீரத்தையும், உணர்ச்சியையும் என்னால் உணரமுடிகிறது.

160-வது ஆண்டுகள் பழமையானது என்பது சென்னை, கல்கத்தா மற்றும் மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கே சொந்தமானது. அதை தாங்கி உயர்நீதிமன்றக் கட்டடம் மிகக் கம்பீரமாக நிற்கிறது. உலக நீதிமன்றத்துக்கே அடையாளமாக உள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அது இதே கம்பீரத்துடனும், அழகுடனும் இருக்குமாறு புதிய கட்டடம் அமைய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

மெட்ராஸ் சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி. பாரம்பரிய கட்டடங்கள் நம் வரலாறு, அதை பாதுகாப்பதில் அரசு கவனமாக உள்ளது. மேலும் பாரம்பரிய கட்டடங்கள் நிறைந்த இடம் நம் சென்னை தான், சென்னை பழைய சட்டக் கல்லூரி வளாகமும், பழமை மாறாமல் மேம்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற நீதித்துறையின் பரிந்துரைக்கு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கியது. மற்றும் நீதித்துறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.

image

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 35 புதிய நீதிமன்றங்கள் ரூ.54.85 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கவும் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றும் 155 பணியாளர் பணியிடங்கள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன. தொடர்ந்து நீதித்துறையின் நிலையான செயலாக்கத்துக்கு அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டின் சார்பாக சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன் என்று பேசியவர், உச்சநீதிமன்றத்துக்கான தென்னிந்திய கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று கூறினார். அதில் உச்சநீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இங்கு வந்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதை நிறைவேற்றித் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

இறுதியில் நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று தனது உரையை முடித்து வைத்தார்.

பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சிறப்புறை ஆற்றினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post