
வியாசர்பாடியில் இரவு வீட்டிற்கு தாமதமாக வருவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகன் தற்கொலை செய்ததையறிந்து தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி கரிமேடு இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவருக்கு திருமணமாகி இளவரசி என்ற மனைவியும், சுசில் என்ற மகனும் உள்ளனர். சுசில் பிகாம் படித்துவிட்டு சேலைவாயில் பகுதியில் உள்ள நடனப்பள்ளியில் வேலை பார்த்து வந்தார். தினமும் வேலை முடித்து சுசில் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுசிலின் தந்தை ரகுநாதன் கண்டித்த நிலையில் மன உளைச்சல் அடைந்த சுசில், மாலை 4 மணியளவில் படுக்கை அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மகன் இறந்ததை அறிந்த சுசிலின் தாய் இளவரசி மகன் இறந்த சோகத்தில் வீட்டிற்குள் சென்று மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே பேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News