மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவியின் ஆபத்தான பயணம் - வைரலாகும் வீடியோ

மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவி கால்களை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்த பதபதைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இந்நிலையில், ரயில் புறப்படும் நேரத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் ரயிலில் ஏறினர். அப்போது அரசுப் பள்ளி மாணவி ஒருவர் ரயில் படிக்கட்டில் நின்றவாறு கால்களை நடைமேடை முடியும் வரையில் தேய்த்தவாறு தொங்கி கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்தார்.

image

இதை அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அந்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த காட்சி வைரலாகி வருகிறது. கல்லூரி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இதுபோன்று ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகும்.

இந்நிலையில் ,பள்ளி மாணவி ஒருவர் கல்லூரி புள்ளிங்கோவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஸ்கேட்டிங் செய்த வீடியோ கண்டனத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடாதவாறு ரயில்வே நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post