புதுக்கோட்டை: போக்சோ வழக்கில் சிறையில் இருக்கும் கோயில் பூசாரி மீது பாய்ந்த குண்டாஸ்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் கோயில் பூசாரியை குண்டர் சட்டத்தில கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி பிரச்னை இருந்துள்ளது. இதை அறிந்த கோயில் பூசாரி பழனி (65) என்ற முதியவர் சிறுமியின் தாயாரை அணுகி சிறப்பு பூஜை மூலம் சிறுமியின் வயிற்றில் வலியை குணப்படுத்தலாம் என கூறியுள்ளார்.

image

இதனை நம்பிய சிறுமியின் தாயும் அந்த சிறுமியை பூசாரி பழனியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயாரை வீட்டின் வெளியே அமர வைத்த பூசாரி பழனி, வீட்டிற்குள் சிறுமியின் வயிற்று வலியை போக்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறியுள்ளார்.

ஆனால், சிறுமியை பூசாரி பழனி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி 3 மாதம் கர்ப்பமான நிலையில், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

image

இதையடுத்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பூசாரி பழனியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பண்டேயின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதனையடுத்து பூசாரி பழனியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post