அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தற்போது மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் அதிமுக தலைமையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின்போது 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இதனிடையில் அமலாக்கத்துறை வழக்கை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கின்பேரில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததால் வழக்கு தொடர்ந்து நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

image

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதே புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி முறையீடு செய்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அமலாக்கத்துறையின் இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது. முடிவில் வழக்கை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post