ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினிக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. தனது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

image

மேலும் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக 7 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை (25.08.2022) சிறைக்கு திரும்ப இருந்தார். இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா, நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். அதனையடுத்து 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

image

பரோலில் உள்ள நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post