சென்னை: கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - ஆவடி மக்கள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக ஆவடி மாநகராட்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது இதன் காரணமாக தாழ்வான பகுதி மட்டுமின்றி பிரதான சாலைகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

image

இந்த நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பிருந்தாவனம் நகர் பகுதியில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மின்சாதனங்கள் பர்னிச்சர்கள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

image

ஒரு மணி நேரம் மழைகே ஆவடி மாநகராட்சியில் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், வரவிருக்கும் மழைக்காலங்களில் தங்கள் பகுதி பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post