சென்னைக்கு 383வது பிறந்தநாள் - கொட்டும் மழையிலும் களைகட்டிய கொண்டாட்டம்

சென்னை இன்று 383-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. சென்னை தினத்தையொடி பெசன்ட் நகரில் கொட்டும் மழையிலும் கொண்டாட்டம் களைகட்டியது.

வந்தாரை வாழவைக்கும் நகரம் என்று அழைக்கப்படும் சென்னைக்கு, இன்று 383ஆவது பிறந்தநாள். முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்னை தினத்தை கொண்டாட மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. அதன்படி பெசன்ட் நகரில் இரண்டாவது நாளாக கிராமிய கலைகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம் நடைபெற்றது.

உணவு திடல், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்ததால், திருவிழாவை காண வந்ததுபோல், கூட்டம் அலைமோதியது. சிங்கப்பூர் நகரின் பண்டிகைக்கால வீதிகளை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வண்ண விளக்குகள் பார்வையாளர்களை வெகுமாக கவர்ந்தன.

image

சென்னை தினக் கொண்டாட்டத்தின்போது, இரவில் திடீரென மழை பெய்தது. எனினும் அதனையும் பொருட்படுத்தாமல் பலர் கொண்டாட்டத்தை தொடர்ந்தனர். புத்தாண்டு போல், இனி ஒவ்வொரு ஆண்டும், இதேபோல் சென்னை தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: '2024ல் பிரதமர் மோடிக்கு மக்களே லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்' - மணிஷ் சிசோடியா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post