கூடலூரில் இடிந்து விழுந்த நூலகத்திற்குள் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை மீண்டும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகர் பகுதியில் உள்ள நூலக கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த இடிபாடுகளுக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிக்கி கொண்டன. நேற்று மாலை புத்தகங்களை மீட்பதற்கான பணிகள் நடந்த நிலையில் கனமழை காரணமாக முடியாமல் போனது.
இன்று காலை மழை குறைந்த நிலையில் நகராட்சி பணியாளர்களை கொண்டு புத்தகங்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. ஏராளமான புத்தகங்கள் மழை நீரில் நனைந்து வீணாகி உள்ளன. நூலக கட்டிடம் ஆபத்தான நிலையில் காணப்படுவதால் நகராட்சி பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே புத்தகங்களை மீட்டு வருகிறார்கள்.
இதையும் படிக்க: முடிவுக்கு வந்தது அமைச்சரவை இழுபறி! பதவி கிடைக்காமல் பல சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News