திருவள்ளூர்: கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தபோது கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி அடுத்த கரும்புகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (28). ஓட்டுனரான இவர், வேலையின்மை காரணமாக கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வெளியே உள்ள கழிவுநீர் தொட்டியின் இணைப்பை சுத்தம் செய்த ஹரீஷ், திடீரென மயக்கம் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

image

இதையடுத்து அவரை மீட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துகள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஹரிஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post