
தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திருப்பத்தூர், தருமபுரி, செங்கல்பட்டு, அரியலூர் உள்பட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News