ரோலக்ஸ்-ல் இத்தனை சிறப்பம்சங்களா? வியக்கவைக்கும் தகவல்கள்!

உலகின் பிரமாண்டமான அதிக விலைகொண்ட வாட்ச் எது என்றால் ரோலக்ஸ் தான் என எவருமே கூறுவார்கள். நூற்றாண்டு பெருமை கொண்ட அந்த ரோலக்ஸ் வாட்ச் குறித்த சில முக்கிய தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகளை காண்போம்.

1. சுவிட்சர்லாந்தில் ஒரு ரோலக்ஸ் வாட்ச் தயாரிக்க ஒரு வருட காலத்தை அதன் நிறுவனம் செலவிடுகிறது. அதில் இருக்கும் ஒவ்வொரு அமைப்புகளும் கைகளாலேயே பொருத்தப்படுகிறது. ரோலக்ஸ் வாட்சை தயாரிக்க அத்தனை முக்கியத்துவமும் ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் கொடுக்கப்படுகிறது.

image

2. ரோலக்ஸ் வாட்ச்க்கான அனைத்து உதிரிபாகங்களையும் ரோலக்ஸ் நிறுவனமே சொந்தமாக தயாரிக்கிறது. வெளியில் இருந்து சிறு துகள்களை கூட ரோலக்ஸ் பெறாது. தர உறுதிக்கான செயல்பாடுகளை மிகவும் நுட்பமாக கையாள்கிறது.

3.ஒவ்வொரு ரோலக்ஸும் காற்றழுத்த கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் காற்றுக் கசிவோ, தண்ணீர் ஊடுறுவலோ தென்பட்டால் அந்த வாட்சை இரண்டாம் தரத்துக்கு அனுப்பி சந்தையில் வெளியிடாமல் முற்றிலும் அகற்றப்பட்டு ஸ்கார்ப் செய்யப்படும்.

image

4. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த துருப்பிடிக்காத ஸ்டீலை ரோலக்ஸ் பயன்படுத்துகிறது. மற்ற உயர் ரக கைகடிகாரங்களில் 316 L கொண்ட எஃகு பயன்படுத்தப்பட்டால் ரோலக்ஸில் மட்டுமே 904 L எஃகு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எந்த குழியில் இருந்தாலும் துரு அரிப்பு போன்றவற்றால் ரோலக்ஸ் பாதிக்காது.

5.1968ல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் தோலால் உருவாக்கப்பட்ட டேடொனா ரக ரோலக்ஸ் வாட்ச் 18 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 139 கோடி) நியூயார்க்கில் நடந்த பிலிப்ஸின் ஏலத்தில் விலை போனது. 

image

6.உலகிலேயே ரோலக்ஸ் மட்டுமே தனது தயாரிப்புக்கு சொந்த தங்கத்தை பயன்படுத்துகிறது. இதற்காகவே சுவிட்சர்லாந்தில் உள்ள தலைமையகத்தில் ஒரு ஃபவுண்டரியையே ரோலக்ஸ் உருவாக்கியிருக்கிறது. இந்த தலைமையகம் அமெரிக்காவின் பெண்டகனை போல அத்தனை சிறப்பு பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது.

7. ரோலக்ஸ் தலைமையகத்தின் ஒரு தளத்தில் பணியாற்றும் ஊழியர் வேறு தளத்திற்கு செல்ல முடியாதபடி செக்யூரிட்டி சிஸ்டம் அத்தனை பலம். கைரேகை ஸ்கேனர்கள், சிறப்பு வங்கி பெட்டகங்கள் அனைத்தும் நிறுவப்பட்டிருக்கும்.

image

8.ரோலக்ஸ் என்ற பெயருக்கு உண்மையில் என்ன அர்த்தம் என எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. தற்போதுதான் ரோலக்ஸ்னா ஆடம்பரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் ரோலக்ஸ் என்ற பெயருக்கு எந்த அர்த்தமும் இல்லை என நிறுவனர் ஹேன்ஸ் வில்ஸ்ட்ராஃப் கூறியிருக்கிறார். எளிதாகவும், ஷார்ட்டாகவும் இருந்ததாலும், அனைத்து மொழிகளிலும் அழைப்பதற்கு சுலபமாக இருக்கும் என தெரிவித்தார் ஹேன்ஸ். ஆனால் வாட்ச் மேக்கர்கள் இந்த பெயர் horlogerie exquise என்ற பிரஞ்சு வார்த்தையில் இருந்து வந்ததாக நம்புகிறார்கள்.

9. சுவிட்சர்லாந்தில் ரோலக்ஸ் தயாரிக்கப்பட்டாலும் உண்மையில் அது லண்டனில் உருவானது. Hans Wilsdorf , Alfred Davis என்ற இருவரும் முதல் முதலில் Wilsdorf and Davis என்ற பெயரில் நகைகளை விற்று வந்தார்கள். ஆனால் 1919ல் உலகப்போர் நடந்ததால் தங்களுடைய நிறுவனத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவுக்கு மாற்றி அங்கு ரோலக்ஸை தயாரித்தார்கள்.

image

10. ரோலக்ஸ் வாட்சுகளின் முக்கிய சிறப்பம்சமே டையலில் உள்ள நிமிடங்கள் அனைத்தும் ரோமன் எழுத்தில் இருந்தாலும் 4 அதாவது IVக்கு பதில் IIII என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

11. ஆழ்கடலில் 12,000 மீட்டரில் ( 39,370 அடி ஆழத்தில்) இருந்தாலும் 7 மணிநேரத்திற்கு ரோலக்ஸ் வாட்ச் செயல்படுமாம். ரோலக்ஸ் வாட்சின் குறைந்தபட்ச விலையே 4 லட்ச ரூபாயாம். 

ALSO READ: உணவிலிருந்து சிமென்ட்.. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post