'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்

திமுககாரர்கள் கெடு வைத்தால், கிளர்ந்தெழுந்தால் அண்ணாமலை கூட்டத்திற்கு பேசுவதற்கு ஆள் இல்லாமல் போய்விடுவார் என்று சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் திமுகவின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைப்பெற்றது. திமுக நாகை மாவட்ட பொறுப்பாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான கௌதமன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் கலந்துக் கொண்டு தமிழக அரசு மற்றும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை விளக்கி பேசினார்.

imageimage

அப்போது அவர் பேசும்போது, "தருமபுரத்தில் பட்டினப்பிரவேசம் சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது அதனால் நாட்டுக்கு என்ன நடந்தது. தொடர்ந்து அண்ணாமலை தபிழக அரசுக்கு கெடு விடுக்கிறார், அதற்கு அவருக்கு உரிமையில்லை அதே அண்ணாமலைக்கு திமுககாரர்கள் கெடு வைத்தால் கிளர்ந்தெழுந்தால் அண்ணாமலை 72 மணி நேரத்தில் மேடையில் பேசுவதற்கு ஆள் இருக்கமாட்டார்கள் ஆனால் அந்த அளவுக்கு ஸ்டாலின் கீழிறங்கமாட்டார். பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ்கட்சியினர் வரவேற்க கூடிய மனநிலைக்கு வர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post