`கோயில் அலுவலகங்களில் அசைவம் சாப்பிட அனுமதியில்லை'- அமைச்சர் சேகர் பாபு

`தமிழ்நாட்டில் உள்ள கோயில் அலுவலகங்களில் அசைவ உணவு சாப்பிட அனுமதியில்லை' என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கோவில் நகைகளை உருக்கிய பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம் கோடிக்கான வருமானம் அக்கோவில்களுக்கு கிடைப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் சரஸ்வதி, “கோவில்களில் பணிபுரிபவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்றும் கோவில் நகைகளை உருக்குவதில் எவ்வளவு பணம் கிடைக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

image

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “கோவில்களில் பணிபுரியும் அலுவலருக்கு அசைவம் பரிமாறப்படுவது இல்லை. அப்படி சாப்பிடுவது இருந்தால், அதற்கு தடையை ஏற்படுத்துவதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். அறங்காவலர் இருக்கும் திருகோவில்களில் தங்கங்களை உருக்கலாம் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

மேலும், அதன் அடிப்படையில் மூன்று மண்டலங்களா பிரித்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் நகைகளை உருக்கும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்தி: `மக்கள் நலப்பணியாளர்கள் திருப்பி வழங்கிய தொகை மீண்டும் அவர்களுக்கே!’-தமிழ்நாடு அரசு முடிவு

image

“முதற்கட்டமாக திருச்சங்குடியில் உள்ள கோவில் நகைகள் மத்திய அரசுக்கு சொந்தமான மும்பை உள்ள தங்க உருக்கு ஆலைக்கு 27 கிலோ 600 கிராம் நகைகள் அனுப்பபட்டு பெறப்பட்ட பணம் எஸ்பிஐ வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கான வருமானம் கிடைப்பதால், இந்த பணத்தின் கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம்” என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post