நடிகர் கார்த்தியை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்: மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

நடிகர் கார்த்தியை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் வருகிற மே 25 தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், அவரது ரசிகர்கள் மதுரையில் அரசியல் சார்ந்து வித்தியாசமாக போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர் அந்த போஸ்டரில் நடிகர் கார்த்தி தலைமை செயலகம் முன்பு நிற்பது போலவும், அதன் வலது பக்கம் எம்.ஜி.ஆரும், இடது பக்கம் கருணாநிதி என முன்னாள் முதலமைச்சர்கள் படங்கள் இடம் பெற்றுள்ளது.

image

ஆளுமைமிக்க மறைந்த இரண்டு முதலமைச்சர்கள் வழியில் கார்த்திக் ஆட்சி செய்வார் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களை அச்சிட்டு சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர் தற்போது மதுரையில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே, நடிகர் விஜய், அஜித் ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பும் அவரது ரசிகர்கள் சார்பாக மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்கள் வைரலாகிய நிலையில், நடிகர் கார்த்தியும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் எண்ணுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post