பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள 'மன்ங்கிபாக்ஸ்' - அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள்!

மனிதர்களுக்கு மன்ங்கிபாக்ஸ் (Monkeypox) வைரஸ் பரவியிருப்பதை உறுதிசெய்திருக்கிறது பிரிட்டன். தொற்று பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதனுக்கு தொற்று பரவியது உறுதியாகியிருக்கிறது. சமீபத்தில் நைஜீரியாவுக்குச் சென்ற ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மன்ங்கிபாக்ஸ் நோய் என்றால் என்ன?

மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று என்பது மிகவும் அரிதான ஒரு நோய் என்று தெரிவித்திருக்கின்றன அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC). Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது மன்ங்கிபாக்ஸ் வைரஸ். விலங்கியல் நோயான இது தொடக்கத்தில் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் பரவியதாகவும், மிகவும் அரிதாகவே மற்ற பகுதிகளுக்கு பரவக்கூடியது எனவும் தெரிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

image

மன்ங்கிபாக்ஸ் அறிகுறிகள்

காய்ச்சல், தடுப்பு, தீவிர தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு மற்றும் கணுக்கால் வீக்கம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகக் கூறப்பட்டுள்ளது. காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கட்டிகள் போன்ற கொப்புளங்கள் ஏற்படுவதாகவும் WHO தெரிவித்திருக்கிறது. மேலும் தடிப்புகள் முகம், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் அதிகமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறது. மேலும் வாய்வழி, கண்கள் மற்றும் பிறப்புறுப்புகள் வழியாக அடர்த்தியான சளி போன்ற திரவம் வெளிப்படுவதாகவும் கூறியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 6 - 13 நாட்கள் வரையும், சிலருக்கு 5-21 நாட்கள் வரையும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் WHO தெரிவித்திருக்கிறது.

image

மனிதனுக்கு எப்படி பரவுகிறது?

மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று எளிதில் மனிதனுக்கு மனிதன் பரவாது என்கிறது UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம். 1958ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக குரங்குகள் வைக்கப்பட்டிருந்த காலனிகளில் இந்த வைரஸ் தொற்று இரண்டுமுறை அதிகளவில் பரவியதால் மன்ங்கிபாக்ஸ் என பெயர் கொடுக்கப்பட்டதாக CDC தெரிவித்திருக்கிறது. காங்கோ நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே 1970ஆம் ஆண்டு, மனிதனுக்கு இந்த வைரஸ்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட மிருகத்தின் ரத்தம், உடல் நீர் அல்லது சளி போன்றவற்றுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே இந்த தொற்று பரவும் என்று கூறியுள்ளது WHO. மேலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட விலங்கின் மாம்சத்தை நன்றாக சமைக்காமல் உட்கொள்ளும்போது தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவித்திருக்கிறது.

image

சிகிச்சைமுறைகள்

WHO கூற்றுப்படி, மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சைமுறை இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் பெரியம்மை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 85% மன்ங்கிபாக்ஸ் தொற்று பரவும் வாய்ப்பில்லை என்பதால் பெரியம்மை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post