நாகூர் தர்காவுக்கு சொந்தமான சொத்துகள் மீட்பு

புகழ்பெற்ற நாகூர் தர்காவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, புதிய அறங்காவலர் குழுவினர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா நிர்வாகத்தை பாரம்பரிய அறங்காவலர் குழுவினர் மேற்கொள்ள, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி, தேர்வு செய்யப்பட்ட புதிய அறங்காவலர் குழுவினர், தர்காவுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிந்து மீட்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

image

அதன்படி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் - முசிரியம், இலங்கார்குடி, திருத்துறைபூண்டி - ஜம்புவானோடை ஆகிய இடங்களில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.

அவற்றுக்கான சொத்துப் பத்திரங்கள் தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்கும் பணி தொடரும் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post