ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 7-ம் தேதி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது தற்போது இன்னும் உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, மார்ச் மாதத்தில் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965ஆக இருந்தது.

image

இந்நிலையில் இந்த மாதம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,000ஐ தாண்டியுள்ளது. அந்தவகையில் இம்மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இரு முறை உயர்ந்துள்ளது. முதல் முறை, ரூ.50 அதிகரித்து 1,015ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர், அடுத்தமுறை தற்போது ரூ.3 அதிகரித்து ரூ.1018.50க்கு விற்பனையாகிறது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507 என விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post