தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு இன்று 4,012 மையங்களில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 5,529 பதவியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வினை 6.82லட்சம் பெண்கள் உள்பட 11.78 லட்சம் பேர் குரூப்-2 தேர்வு எழுத உள்ளனர். குரூப்-2 தேர்வு பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் 323 பறக்கும் படை, 6,400 ஆய்வு குழு, 4,012 வீடியோ குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் எனவும், ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News