இரு தார மணம் புரியும் அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது
தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன், அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் நீதிமன்ற பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசுப்பணியாளர்கள் சிலரின் இறப்பிற்கு பின்பே அவர்கள் இரு தார மணம் புரிந்தது தெரியவருவதாகவும் இதன் காரணமாக அப்பணியாளர்களின் வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதிய பலன்களை அளிப்பதில் இன்னல்கள் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே அரசுப்பணியாளர்கள் முதல் மனைவி அல்லது கணவர் இருக்கும் போது இரண்டாவதாக ஒருவரை மணம் புரிந்தாலோ அல்லது வேறு தவறான நடத்தையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை தவிர குற்றவியல் வழக்கு பதியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:ஆக்கிரமிப்பு புகார்; 35 வருடமாக சாஸ்தா யுனிவெர்சிடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-ஐகோர்ட்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News