ஆவடி அருகே வீட்டின் பின்புறன் விளையாடச் சென்ற 2 வயது சிறுவன் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியை அடுத்த பாலவேடு பஜனை கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரவேல் (40) ராஜேஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், ரியாஷ்குமார் (2), மற்றும் 1 மாத கை குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கை குழந்தையை ராஜேஸ்வரி குளிக்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது இவருடைய மூத்த மகன் ரியாஷ்குமார் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
இந்நிலையில், ரியாஷ்குமாரை காணாததால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் தேடியபோது ரியாஷ்குமாரை தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரியாஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முத்தாப்புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News