உசிலம்பட்டி மாப்பிள்ளை.. இங்கிலாந்து பொண்ணு - மதுரையில் மாஸ் ரிசப்ஷன்

உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இங்கிலாந்து சாரா எலிசபெத் என்ற இளம்பெண் - வரவேற்பு நிகழ்வில் மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச் சூழலை பாதுகாக்க மணமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சாம்டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இங்கிலாந்தில் பிசியோதரபிஸ்ட் - ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து ப்ரஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எலிசபெத் என்ற ஆக்குபேஸன்ட் தரபிஸ்ட் -யை கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

image

தற்போது நாடு திரும்பியுள்ள இந்த இளம் ஜோடிக்கு உசிலம்பட்டியில் உள்ள ஏஜி சர்ச் -ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி மணமக்கள் இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகளை நட வலியுறுத்தினர்.

image

தொடர்ந்து கணவரின் உறவினர்கள் மற்றும் இங்கு உள்ள மக்கள் அன்பு செலுத்துவது மிகவும் பிடித்து போனதாகவும், கிராமப்புற பகுதி மிகவும் அழகானதாக உள்ளதாகவும், இங்குள்ள கலாசாரம், உடைகள் மற்றும் உணவு முறைகளான அரிசி சாதம், சப்பாதி, சிக்கன் பிரியாணி என இந்திய உணவு வகைகள் அனைத்தும் அருமை என சாரா எலிசபெத் பேட்டியளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post